இலவச வேட்டி ஊழல் போலீசில் புகார் செய்கிறது பா.ஜ.,
இலவச வேட்டி ஊழல் போலீசில் புகார் செய்கிறது பா.ஜ.,
இலவச வேட்டி ஊழல் போலீசில் புகார் செய்கிறது பா.ஜ.,
ADDED : பிப் 11, 2024 12:50 AM
அண்ணாமலையின் நேற்றைய அறிக்கை:
பொங்கல் தொகுப்பில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாக பயன்படுத்தி வந்த பருத்தி நுாலின் அளவை குறைத்து, விலை குறைவான பாலிஸ்டர் நுாலை பயன்படுத்தி, ஊழல் நடந்திருக்கிறது.
இதுகுறித்து, கைத்தறி துறை அமைச்சர் காந்தி மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறோம். அதற்கு அவர், 2003 அரசாணையை காட்டி, திசை திருப்பும்விதமாக பேசி மக்களை குழப்புகிறார். அரசாணைப்படி வேட்டியில், 'வெப்ட்' பகுதி நெசவு செய்ய, பாலிஸ்டர் நுாலை பயன்படுத்தலாம். வார் பகுதியை நெய்ய, கடந்த ஆண்டு வரை, 100 சதவீத பருத்தி நுால் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், வார் பகுதியை நெய்யவும், விலை குறைந்த பாலிஸ்டர் நுால் பயன்படுத்தியுள்ளனர். ஒரு வேட்டியில் 78 சதவீதம் பாலிஸ்டர் நுால் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
கோவை ஜவுளி ஆராய்ச்சி மையத்தில், நாங்கள் சோதனை செய்ததும், வார் பகுதியை தானே தவிர, வெப்ட் பகுதியை அல்ல. சோதனையில், தவறு நடந்திருப்பது ஆதாரங்களுடன் கண்டறிந்துள்ளோம்.
இதுதொடர்பான அனைத்து ஆதாரங்களுடன், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில், தமிழக பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.