சென்னையில் மோசமான வானிலை நிலவரம்; தரை இறங்க முடியாமல் வட்டமடிக்கும் விமானங்கள்!
சென்னையில் மோசமான வானிலை நிலவரம்; தரை இறங்க முடியாமல் வட்டமடிக்கும் விமானங்கள்!
சென்னையில் மோசமான வானிலை நிலவரம்; தரை இறங்க முடியாமல் வட்டமடிக்கும் விமானங்கள்!
ADDED : மே 20, 2025 08:00 PM

சென்னை: சாதகமான வானிலை இல்லாத காரணத்தினால் சென்னை விமான நிலையத்தில் 9 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளியுடன் கனமழை பெய்தது. மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது வரை பல்வேறு இடங்களில் லேசான முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
அந்தமான், புவனேஸ்வர், கோவா, மும்பை, திருச்சி, டெல்லி, கோவை, சிங்கப்பூர், இலங்கை, மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த 9 விமானங்கள் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து வருகின்றன.
இதனால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களும் தாமதமாக புறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. டில்லி, மும்பை, சேலம், சீரடி, ஹைதராபாத், இலங்கை ஆகிய 6 விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டன.