கன்னியாகுமரியில் ரயிலை கவிழ்க்க முயற்சி; தீவிர விசாரணை
கன்னியாகுமரியில் ரயிலை கவிழ்க்க முயற்சி; தீவிர விசாரணை
கன்னியாகுமரியில் ரயிலை கவிழ்க்க முயற்சி; தீவிர விசாரணை
ADDED : மார் 20, 2025 11:23 AM

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மங்களூர் செல்லும் பரசுராமன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மார்ச் 20) குமரியில் இருந்து புறப்பட்டது. இரணியல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார்.
இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.