ADDED : ஜன 02, 2024 11:57 PM
தமிழக வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறையோடு செயல்படுகிறது என்பதை, பிரதமர் மோடி வருகை உறுதி செய்துள்ளது. தமிழகத்தின் தொடர் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அரசாக, மத்திய அரசு செயல்படுகிறது. இதன் எடுத்துக்காட்டாக நேற்று, திருச்சியில், 1,112 கோடி ரூபாய் மதிப்பிலான விமான நிலைய புதிய முனையத்தை, பிரதமர் திறந்து வைத்துள்ளார். சாலை போக்குவரத்தில் விரிவாக்கம், ரயில் போக்குவரத்தில் விரிவாக்கம், மின்மயமாக்கம், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.
வாசன் த.மா.கா., தலைவர்