Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'எமர்ஜென்சி' கருத்தரங்கம் பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

'எமர்ஜென்சி' கருத்தரங்கம் பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

'எமர்ஜென்சி' கருத்தரங்கம் பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

'எமர்ஜென்சி' கருத்தரங்கம் பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

ADDED : ஜூன் 26, 2025 02:00 AM


Google News
மதுரை: 1976ல் காங்கிரஸ் காலத்தில் அமல்படுத்தப்பட்ட 'நெருக்கடி' நிலையை (எமர்ஜென்சி) நினைவுபடுத்தும் வகையில் மாவட்டம் தோறும் இன்றும், நாளையும் கருத்தரங்கம் நடத்த பா.ஜ., ஏற்பாடு செய்துள்ளது.இந்திய அரசியல் வரலாற்றில் பிரதமராக இந்திரா இருந்தபோது 1975 - 76 ல் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து, எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கும் முயற்சியில் இறங்கினார். எதிர்த்த கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து 1977 ல் அக்கட்சி படுதோல்வி அடைந்து, ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சியைப் பிடித்தது.இது நடந்து ஐம்பதாண்டுகளாவதையொட்டி அதை பா.ஜ., கையில் எடுத்துள்ளது. இதனை இன்றைய தலைமுறையினரிடம் எடுத்துக் கூறும் வகையில் தேசிய அளவில் கருத்தரங்கு நடத்த உத்தரவிட்டுள்ளது. தமிழக பா.ஜ.,வின் 67 மாவட்டங்களிலும் இதில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினரை அறிவித்துள்ளது.

மதுரை நகரில் மாநில சட்டப்பிரிவு தலைவர் வணங்காமுடி, மதுரை கிழக்கில் மாநில உள்ளாட்சி வளர்ச்சி பிரிவு தலைவர் சோழன்பழனிச்சாமி, மேற்கில் மாவட்ட பார்வையாளர் வெற்றி வேல், திண்டுக்கல் கிழக்கில் மதுரை மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், கிழக்கு மாவட்ட பார்வையாளர் ரவிபாலா, தேனியில் தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மகாலட்சுமி, ராமநாதபுரத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் பழனியப்பன், சிவகங்கையில் மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், விருதுநகர் கிழக்கில் தென்காசி மாவட்ட நிர்வாகி மகாராஜன், மேற்கில் நெல்லை மாவட்ட நிர்வாகி நீலமுரளி யாதவ் நியமிக்கப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us