Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: உயர்நீதிமன்றம் பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: உயர்நீதிமன்றம் பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: உயர்நீதிமன்றம் பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை: உயர்நீதிமன்றம் பாராட்டு

ADDED : பிப் 06, 2024 07:46 AM


Google News
மதுரை: போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை கண்காணிக்க 55 அதிகாரிகளை நியமித்துள்ள தமிழக அரசின் நடவடிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டியது.

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி நாகூர் கனி. இவர் 2018 ல் ஒரு வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக புளியங்குடி போலீசார் பறிமுதல் செய்தனர். வாகனத்தை விடுவிக்க உத்தரவிடக்கோரி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நாகூர்கனி மனு செய்தார். அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

ஏற்கனவே விசாரித்த நீதிபதி: இம்மனு நிலைக்கத்தக்கதல்ல.

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் பறிமுதலான வாகனங்களை மீட்க உரிமையாளர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதுவரை உரிமை கோரவில்லை என அரசு தரப்பு கூறியது.

உரிமை கோரப்படாத வாகனங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ளன. அவை மழை, வெயிலில் கிடக்கின்றன.

தமிழகத்தில் அந்தந்த மண்டலங்களில் உரிமை கோரப்படாத மற்றும் திரும்ப ஒப்படைக்கப்பட்ட வாகனங்களின் விபரங்களை, 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்நீதிமன்றத்தில் அறிக்கையாக டி.ஜி.பி., தாக்கல் செய்ய வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார். இதன்படி அவ்வப்போது அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்கிறது.

நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் நேற்று விசாரித்தார்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ஜாம்சன், கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி.,பெனாசிர் பாத்திமா ஆஜராகினர்.

அரசு தரப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்தியாவிலேயே முதல்முறையாக 6 டி.ஐ.ஜி.,கள், 1 எஸ்.பி., 7 ஏ.டி.எஸ்.,பிகள், 30 டி.எஸ்.பி.,கள், 11 உதவி கமிஷனர்களை நியமித்து போதைப்பொருள் தடுப்பு ஏ.டி.ஜி.பி., மகேஷ் குமார் அகர்வால் உத்தர விட்டுள்ளார்.

இந்த அதிகாரிகள் போதைப்பொருள் பறிமுதல், வழக்கு பதிவு, நீதிமன்ற விசாரணை, குற்றப்பத்திரிக்கை தாக்கல், வழக்கு பைசல் செய்யப்படும்வரை கண்காணிப்பர். இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதி: தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது. மேல்நடவடிக்கை குறித்து பிப்.,12 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us