Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பண மோசடி மேலும் ஒரு எஸ்.ஐ., கைது

பண மோசடி மேலும் ஒரு எஸ்.ஐ., கைது

பண மோசடி மேலும் ஒரு எஸ்.ஐ., கைது

பண மோசடி மேலும் ஒரு எஸ்.ஐ., கைது

ADDED : ஜூன் 07, 2025 12:47 AM


Google News
சென்னை:அடிதடி, கட்டப்பஞ்சாயத்து கும்பலுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்ட, மேலும் ஒரு போலீஸ் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம், 22ல், சென்னை நுங்கம்பாக்கத்தில், 'லார்டு ஆப் தி ட்ரிங்ஸ்' என்ற பாரில் தகராறு செய்த, பனையூரைச் சேர்ந்த அஜய் வாண்டையார் எனப்படும் அஜய் ரோகன், 36 உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த, மதுரை எம்.பி., வெங்கடேசனின் பாதுகாவலரான போலீஸ்காரர் செந்தில்குமாரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பண மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாக, கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணிபுரிந்த எஸ்.ஐ., மணித்துரை ஏற்னகவே கைது செய்யப்பட்டார். தற்போது, தாம்பரம் கமிஷனரகத்தில், சைபர் கிரைம் எஸ்.ஐ.,யாக பணிபுரியும் எஸ்.ஐ., சதீஷ்குமார், 36, என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரையும், காவல் நிலைய ஜாமினில் போலீசார் விடுவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us