பா.ஜ.,வில் அண்ணாமலை முக்கிய தலைவர்
பா.ஜ.,வில் அண்ணாமலை முக்கிய தலைவர்
பா.ஜ.,வில் அண்ணாமலை முக்கிய தலைவர்
ADDED : செப் 23, 2025 04:14 AM

பா.ஜ.,வை பொறுத்தவரை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் மாற்றம் இருக்கும். தமிழக பா.ஜ., தலைவராக, இதுவரை பலர் இருந்துள்ளனர். தலைவர்கள் மாற்றம் என்பது இயற்கை. முன்னாள் தலைவர் அண்ணாமலை புறக்கணிக்கப்படவில்லை. அவர் முக்கியமான தலைவர்.
ஓட்டு திருட்டு தொடர்பாக காங்கிரஸ் கூறுவது முழுக்க பொய். ஜோக்கர் மாதிரி, நினைத்ததை எல்லாம் ராகுல் பேசி வருகிறார். நடிகர் விஜய்க்கு கூட்டம் வருகிறது. கூட்டம் வருவதை வைத்து ஓட்டு போடுவர் என்று சொல்ல முடியாது. கோவைக்கு வந்த நடிகர் தனுஷுக்கு கூட, நிறைய கூட்டம் வந்தது.
- கனகசபாபதி துணைத்தலைவர், தமிழக பா.ஜ.,