PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சருமான முருகன், மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், 'வரும் 2026 சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது. டில்லியில் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை எப்படி துாக்கி வீசிவிட்டு, அங்கு ஆட்சி அமைத்தோமோ, அதுபோல 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
'அரவிந்த் கெஜ்ரிவாலை ஆட்சியை விட்டு மக்கள் எப்படி துரத்தினரோ, அதுபோல, தமிழக முதல்வர் ஸ்டாலினையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவர். தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை எப்போதுமே எங்களது வழிகாட்டி தலைவராக இருக்கிறார்...' என்றார்.
இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அண்ணாமலை வழிகாட்டுதல்ல தான், சட்டசபை தேர்தலையே சந்திப்பாங்க போலிருக்கே...' எனக்கூற, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே நகர்ந்தனர்.