விஜய் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம்: தினகரன்
விஜய் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம்: தினகரன்
விஜய் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம்: தினகரன்
ADDED : செப் 15, 2025 01:13 AM

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கும்போது, அந்த கூட்டணியில், அ.ம.மு.க., எப்படி இருக்க முடியும். முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பிரசார கூட்ட செய்திகளை பார்த்தேன்.
ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் திரண்டு வந்திருந்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் விஜயின் பேச்சு இருப்பதாக கூறினர். நான் பார்க்கவில்லை; இருந்தாலும், ஜெயலலிதா பாணியில் ஒருவர் பேசினால், மகிழ்ச்சி.
விஜய் தலைமையில், ஒரு கூட்டணி உருவாகும் என ஏற்கனவே பலமுறை சொல்லி விட்டேன். அவர், தலைமையில் ஒரு கூட்டணி, சீமான் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம் உண்டு.
- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,