அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் விருது பெற்ற சென்னை டாக்டர்
அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் விருது பெற்ற சென்னை டாக்டர்
அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் விருது பெற்ற சென்னை டாக்டர்
UPDATED : ஜூன் 25, 2024 11:58 AM
ADDED : ஜூன் 25, 2024 10:59 AM

சென்னை: டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் மோகன், அமெரிக்க நீரிழிவு சங்கம் மற்றும் எமோரி பல்கலையின் விருதை பெற்றுள்ளார். இந்த விருதுகளை பெறும் முதல் இந்திய டாக்டர் மோகன்.
கெல்லி வெஸ்ட் விருது
நீரிழிவு தொற்றுநோயியலில் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியதற்காக அந்த துறையின் தந்தை என அழைக்கப்படும் கெல்லி வெஸ்ட் பெயரில் அமெரிக்க நீரியியல் சங்கம் ஆண்டுதோறும் ‛ கெல்லி வெஸ்ட் ' விருதை வழங்கி வருகிறது. இந்த துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக 2024 ம் ஆண்டிற்கான ‛கெல்லி வெஸ்ட் ' விருது டாக்டர் மோகனுக்கு வழங்கப்பட்டது.
டாக்டர் மோகன், தெற்கு ஆசியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தெற்கு ஆசிய மக்கள் மற்றும் அதன் சிக்கல்கள் குறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதி உள்ளார்.
முதல் இந்தியர்
அதேபோல், எமோரி பல்கலையின் ‛ஈஜிடிஆர்சி டிஸ்டின்குயிஸ்ட் லெக்சர் விருது' -ம் மோகனுக்கு வழங்கப்பட்டது.
இந்த இரண்டு விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை டாக்டர் மோகன் பெற்றுள்ளார்.