பாராட்டெல்லாம் சரிதான்; பணம் தாங்க! மத்திய அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை
பாராட்டெல்லாம் சரிதான்; பணம் தாங்க! மத்திய அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை
பாராட்டெல்லாம் சரிதான்; பணம் தாங்க! மத்திய அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை
ADDED : ஜூன் 11, 2025 01:33 AM
சென்னை:தமிழகத்தில் வேளாண் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகக் கூறி பாராட்டிய, மத்திய வேளாண்துறை அதிகாரிகளிடம், பாராட்டுடன் கூடுதல் நிதி தாருங்கள் என, அமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், நெல், சிறுதானியங்கள், கரும்பு, எண்ணெய் வித்துகள் சாகுபடி பரப்பு அதிகரிப்பு திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், நெற்பயிருக்கு மாற்றாக தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம், பந்தல் காய்கறிகள் சாகுபடி அதிகரிப்பு, மானாவாரி பகுதி மேம்பாடு, பிரதமரின் பயிர் காப்பீடு, பிரதமரின் விவசாய உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களின் செயல்பாடுகளை, மத்திய வேளாண்துறை இணை செயலர் இனிதா, மத்திய தோட்டக்கலை கூடுதல் ஆணையர் நவீன்குமார் பட்லே ஆகியோர், தமிழகம் வந்து கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்தனர்.
தமிழக வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் தட்சிணாமூர்த்தி, இயக்குநர் முருகேஷ் உள்ளிட்டோரை, நேற்றுமுன்தினம் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர்.
அப்போது, 'தமிழக வேளாண்துறை, மத்திய, மாநில அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறது' என, பாராட்டு தெரிவித்தனர்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் பன்னீர்செல்வம், 'தமிழகத்தில் செயல்படுத்தப்படும், மத்திய வேளாண் திட்டங்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.