ஏர்டெல் சேவை பாதிப்பு: பயனர்கள் அவதி
ஏர்டெல் சேவை பாதிப்பு: பயனர்கள் அவதி
ஏர்டெல் சேவை பாதிப்பு: பயனர்கள் அவதி
ADDED : மே 13, 2025 09:25 PM

சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டு உள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுக்கு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இன்று மாலை, திடீரென ஏர்டெல் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக பயனர்கள் தெரிவித்துள்னர். இதனால், உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொடர்பு கொள்வதில் பிரச்னை உள்ளதாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.சென்னை, மதுரை, காஞ்சிபுரம், தர்மபுரி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பிரச்னை உள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்தப் பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.


