Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் அறிவிப்பு!

UPDATED : மார் 14, 2025 03:01 PMADDED : மார் 14, 2025 11:01 AM


Google News
Latest Tamil News
சென்னை : இன்று தாக்கலான தமிழக பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு முன்னேற்ற வளர்ச்சி பணிகளை முன்னிறுத்தி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் விமான நிலையம், சென்னை அருகே புதிய துணை நகரம், பல மாவட்டங்களில் தொழில் பூங்கா, டைட்டல் பார்க், பழங்கால கோயில்கள் சீரமைப்பிற்கு ரூ. 125 கோடி, பெண்கள் பெயரில் சொத்துப்பதிவில் பதிவு கட்டண சலுகை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2 ஆயிரம், ஆன்லைன் டெலிவரி செய்வோருக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் என பல புதிய திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிப்பதன் மூலம் பெட்ரோல் பயன்பாட்டை குறைத்து, மின் வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்தலாம் என அரசு கருதுகிறது.

2025- 2026 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று ( மார்ச் 14) தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: எத்தகைய சோதனைகள் வந்தாலும் இரு மொழி கொள்கையை விட்டு தர மாட்டோம். இந்தியாவின் 2வது மிக பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இது எதிர்கால வளர்ச்சிக்கான பட்ஜெட் ஆகும். இந்தியாவிற்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது. பல்வேறு துறைகளில் மாநிலம் வளர்ச்சி பெற்று வருகிறது. இருமொழி கொள்கையால் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். திருக்குறள் மொழி பெயர்ப்பு உயர்த்தப்படும். புத்தக கண்காட்சி வெளிநாடுகளிலும் நடத்தப்படும்.

தொல்லியல் ஆய்வுக்கென ரூ. 7 கோடி ஒதுக்கப்படும்.

சிவகங்கை- கீழடி, சேலம்- தெலுங்கனூர், கோவை- வெள்ளலூர், கள்ளக்குறிச்சி- ஆதிச்சனூர், கடலூர்- மணிக்கொல்லை, தென்காசி- கரிவலம்வந்தநல்லூர், தூத்துக்குடி- பட்டணமருதூர், நாகப்பட்டினம் பகுதிகளில் தொல்லியல் ஆய்வு நடத்தப்படும்.

* இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு

* மாணவர்களுக்கு காலை சிற்றுண்டிக்கு ரூ.600 கோடி

* 10 ஆயிரம் பெண்கள் சுய உதவிக்குழு அமைக்கப்படும்

* சென்னை அருகே புதிய துணை நகரம்

* 1,125 மின்சார பஸ்கள் வாங்கப்படும்; அமைச்சர்

* கழிவு நீர் நதிகளில் கலப்பதை தடுக்க சிறப்பு திட்டங்கள்

* காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை விரிவான ஆழ்கடல் அகழாய்வு

* ராமநாதபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

* வேளச்சேரி - கிண்டி வரை மேம்பாலம் அமைக்கப்படும்

* மகளிர் உரிமை தொகை புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு

* மகளிர் உரிமை தொகை 13, 870 கோடி ஒதுக்கீடு

* இலவசமாக 5 லட்சம் மகளிர் நாள்தோறும் பஸ் பயணம்

* நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ. 3,700 கோடி ஒதுக்கீடு

* ரூ. 120 கோடியில் கிராம சாலைகள் சீரமைக்க திட்டம்

* ரூ. 3,500 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்

* சென்னை, கோவை, மதுரையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்

* ஓசூரில் ரூ. 400 கோடியில் டைடல் பூங்கா

* ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்

* விருதுநகர், கடலூர், புதுக்கோட்டையில் தொழில் பூங்கா

* 1,125 மின்சார பஸ்கள் வாங்கப்படும்; அமைச்சர்

*எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினால் ரூ. 10 லட்சம் பரிசு

*செமி கண்டக்டர் திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி

* தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம்

* ஆன்லைன் டெலிவரியில் ஈடுபட்டுள்ளோர் மின்சார வாகனங்கள் வாங்க மானியம்.

இவ்வாறு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

எதிர்கட்சிகள் வெளிநடப்பு ;

சபை துவங்கியதும், அதிமுக மற்றும் பா.ஜ., வினர் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறையில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக எதிர்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார். இதனை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ.,க்கள் பா.ஜ., வினர் வெளிநடப்பு செய்தனர்.



சட்டசபைக்கு வெளியே வந்த எதிர்கட்சி தலைவர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

பட்ஜெட்டில் அறிவித்தது பல்வேறு திட்டங்கள் எல்லாம் நிறைவேற்ற முடியாது. இன்னும் ஓராண்டு காலமே இருக்கும் போது எதையும் நிறைவேற்ற முடியாது. இதற்கு நிதி எங்கே இருக்கிறது. பட்ஜெட்டில் அனைத்தும் வெற்று அறிக்கைகள் தான். நீட் தேர்வு, அரசு ஊழியர் ஓய்வூதியம், நெல், கரும்பு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படவில்லை, 100 நாள் வேலை திட்டம் ஊதியம் உயர்த்தப்படவில்லை. சமையல் காஸ் மானியம் வழங்கப்படவில்லை. பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லை. 73 வருடங்களில் இல்லாத அளவிற்கு திமுக ஆட்சியில் வாங்கிய கடன் 3. 55 லட்சம் கோடியாக வெகுவாக உயர்ந்துள்ளது. திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை.

மதுபான விற்பனையில் முறைகேடு


டாஸ்மாக் மதுபான விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்க துறை விசாரித்து வருகிறது. மது பாட்டில்கள் விலை , மதுபார் டெண்டர், ஆள் பணியிட மாற்றம் என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. மதுபான தயாரிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் விசாரணை முடிவில் 40 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்திருப்பது தெரிய வரலாம் என ஒரு தகவல் தெரிவிக்கிறது. இவ்வாறு பழனிசாமி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us