செப். 5ல் மனம் திறந்து பேசப்போகிறார் செங்கோட்டையன்
செப். 5ல் மனம் திறந்து பேசப்போகிறார் செங்கோட்டையன்
செப். 5ல் மனம் திறந்து பேசப்போகிறார் செங்கோட்டையன்
ADDED : செப் 02, 2025 11:04 AM

ஈரோடு; செப்டம்பர் 5ம் தேதி மனம் திறந்து பேசப் போவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: செப்டம்பர் 5ம் தேதி கோபிசெட்டிபாளையம் அதிமுக அலுவலகத்தில் நான் மனம்திறந்து பேசப் போகிறேன்.
அப்போது நான் என்ன கருத்துகளை பேச போகிறேன் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே அதுவரையில் நீங்கள் பொறுத்திருந்து உதவி செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
பேட்டி முடிந்தவுடன், பல்வேறு கேள்விகளை எழுப்பியவாறே நிருபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றனர். செப்.5ம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை உள்ளதா என்றும் கேள்விகள் எழுப்பினர். அதை கேட்ட செங்கோட்டையன், செய்தியாளர் சந்திப்பு மட்டுமே நடைபெறும் என்று கூறினார்.