Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/யார் இந்த ரத்தீஷ்; டாஸ்மாக் விவகாரத்தில் அ.தி.மு.க. கிடுக்கிப்பிடி கேள்வி

யார் இந்த ரத்தீஷ்; டாஸ்மாக் விவகாரத்தில் அ.தி.மு.க. கிடுக்கிப்பிடி கேள்வி

யார் இந்த ரத்தீஷ்; டாஸ்மாக் விவகாரத்தில் அ.தி.மு.க. கிடுக்கிப்பிடி கேள்வி

யார் இந்த ரத்தீஷ்; டாஸ்மாக் விவகாரத்தில் அ.தி.மு.க. கிடுக்கிப்பிடி கேள்வி

Latest Tamil News
சென்னை: டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீடு அருகே கிழிந்த நிலையில் விவரங்கள் கிடந்த விவகாரத்தில் தொடர்புடைய ரத்தீஷ் யார் என்று அ.தி.மு.க., கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க., சார்பில் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது;

டாஸ்மாக் எம்.டி., வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.

டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்? டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் தி.மு.க., நிர்வாகிகளுக்கு பாதிப்பு என்று அதன் MD-யிடம் ரத்தீஷ் கூறுவது, யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்?

உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்?டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் தி.மு.க.,வின் புதிய Power Center-ஆ?

Logical-ஆக பார்த்தால், ரத்தீஷ் எனும் தனிநபரின் மெசேஜுக்கு Reply பண்ண வேண்டிய அவசியம் டாஸ்மாக் MD-க்கு துளியும் இல்லை.

இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா?

கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us