Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ நீட் தேர்வு ரத்து பொய்யால் மாணவர் உயிரிழப்பு: தி.மு.க., மீது பாயும் இ.பி.எஸ்.

நீட் தேர்வு ரத்து பொய்யால் மாணவர் உயிரிழப்பு: தி.மு.க., மீது பாயும் இ.பி.எஸ்.

நீட் தேர்வு ரத்து பொய்யால் மாணவர் உயிரிழப்பு: தி.மு.க., மீது பாயும் இ.பி.எஸ்.

நீட் தேர்வு ரத்து பொய்யால் மாணவர் உயிரிழப்பு: தி.மு.க., மீது பாயும் இ.பி.எஸ்.

Latest Tamil News
சென்னை: தி.மு.க.,வின் நீட் தேர்வு ரத்து நாடகத்திற்கு மாணவர்கள் பலியாக வேண்டாம் என்று அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்டாலின் மாடல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு. ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா?

அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே, தி.மு.க., ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என இந்த டம்மி அப்பாவும், அவர் மகனும் கூறிய அத்தனையும் பொய், பொய், பொய்.

ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும், ED ரெய்டுக்கு பயந்து 'தம்பி'யை தப்பிக்க வைக்கவுமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. (யார் அந்த தம்பி?)

இவர்களா நீட் ரத்து செய்யப்போகிறார்கள்? அத்தனையும் நாடகம். தி.மு.க.,வின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்.

ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் தான் உலகமே. அவர்களை விட்டுச் செல்ல ஒருபோதும் நினைக்காதீர்கள்.

இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன. அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள். மனம் தளரவேண்டாம்.

தம்பி கௌதமின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலின் அவர்களே, வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோ ஷூட்டை நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us