முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜன 11, 2024 12:51 PM
சென்னை: முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், விசாரணையை ஜன.,31க்கு ஒத்திவைத்தார்.