விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்
விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு; கைதான ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட்

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 24 மணி நேரம் விசாரணைக்கு பிறகு இன்று அவர் விடுவிக்கப்பட்டார்.
திருவள்ளூர் அருகே சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் ஆஜரான புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்தார். இதே வழக்கில், ஏ.டி.ஜி.பி., ஜெயராம், கோர்ட்டில் ஆஜரானார்.
அவர் ஆஜரான சிறிது நேரத்திலேயே நீதிபதி உத்தரவின்பேரில் கோர்ட் வளாகத்திலேயே சீருடையில் நேற்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் பல மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி, விவரங்களை பதிவு செய்தனர். 24 மணி நேரம் போலீஸ் கஸ்டடியில் அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், இன்று மாலை அவரை விடுவித்தனர்.ஜெயராம், தன் சொந்த காரில் ஏறி வீட்டுக்கு சென்றார். விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டும் என்று அவருக்கு போலீசார் நிபந்தனை விதித்துள்ளனர்.
குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி., ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழக டி.ஜி.பி., பரிந்துரை செய்திருந்தார். அதன்படி அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே இந்த வழக்கில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி திருவாலாங்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி இருக்கிறார்.