Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழக திட்டங்களுக்கு போதிய நிதி தரணும்: ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக திட்டங்களுக்கு போதிய நிதி தரணும்: ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக திட்டங்களுக்கு போதிய நிதி தரணும்: ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக திட்டங்களுக்கு போதிய நிதி தரணும்: ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

UPDATED : ஆக 19, 2024 02:24 PMADDED : ஆக 19, 2024 02:14 PM


Google News
சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு குறைந்த அளவிலான நிதியை மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாகக் கூறி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே அதிகளவிலான நிதி ஒதுக்கப்பட்டதாகவும், பிற மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மத்திய அரசை விமர்சித்து இருந்தார்.

மத்திய அமைச்சருக்கு கடிதம்




இந்த நிலையில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், புதிய பாதைகளுக்கு இடைக்கால ஒதுக்கீடாக ரூ.976.1 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட்டில் வெறும் ரூ.301.3 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டை பாதை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.285 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது.

இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவானதாகும். புதிய வழித்தட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.674 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

மின்சார பஸ் சேவை




அதேபோல, கிளாம்பாக்கம் பஸ் நிலையம், மின்சார பஸ் சேவைகள், பெருந்திரள் துரித ரயில் போக்குவரத்துத் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைவுபடுத்த வேண்டும்.

தமிழகத்தில் புதிய வழித்தடங்கள், இரட்டைவழிப் பாதை, வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us