ரூ.11.90 கோடி ஜி.எஸ்.டி., மோசடி ஆம்பூரை சேர்ந்த ஒருவர் கைது
ரூ.11.90 கோடி ஜி.எஸ்.டி., மோசடி ஆம்பூரை சேர்ந்த ஒருவர் கைது
ரூ.11.90 கோடி ஜி.எஸ்.டி., மோசடி ஆம்பூரை சேர்ந்த ஒருவர் கைது
ADDED : செப் 15, 2025 02:55 AM

சென்னை, செப். 15-
போலி ரசீது பயன்படுத்தி, ஜி.எஸ்.டி.,யில், 11.90 கோடி ரூபாய், உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்ட, ஆம்பூரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் ஹபிசூர் ரஹ்மான். இவர் ஜி.எஸ்.டி., உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்டதாக, வணிகவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் துறை அதிகாரிகள், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அவர் பல் வேறு நபர்களின் பெய ரில், போலி ஆவணங்கள், முகவரி பயன்படுத்தி, ஜி.எஸ்.டி., பதிவு செய்தது கண்டறியப்பட்டது.
மேலும், 238 கோடி ரூபாய்க்கு, போலி ரசீதுகள் பயன்படுத்தி, 11.90 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, அவரை கைது செய்தனர். அவர் சென்னை, எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இம்மோசடி தொடர்பாக, தொடர் விசாரணை நடந்து வருகிறது. இத்தகவல் ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால், சென்னை புறநகர் கமிஷனர் நஷீர்கான் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.