Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நெல்லையில் அண்ணன் இறந்த செய்தி கேட்டும் கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலை கடை பெண் ஊழியர்;

நெல்லையில் அண்ணன் இறந்த செய்தி கேட்டும் கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலை கடை பெண் ஊழியர்;

நெல்லையில் அண்ணன் இறந்த செய்தி கேட்டும் கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலை கடை பெண் ஊழியர்;

நெல்லையில் அண்ணன் இறந்த செய்தி கேட்டும் கடமையை தவறாமல் செய்து முடித்த நியாய விலை கடை பெண் ஊழியர்;

ADDED : ஜன 11, 2024 08:52 PM


Google News
Latest Tamil News
நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் லீமா. இவர் தெற்கு பஜாரில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் கிளார்க் ஆக பணிபுரிந்து வருகிறார்.

தற்போது தமிழக அரசு சார்பில் நியாய விலைக் கடைகளில் அரிசி சர்க்கரை கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது எனவே லீமா தான் பணிபுரியும் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.திடீரென அவருக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்துள்ளது அதில் லீமாவின் சகோதரர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்

இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த லீமா அந்த இடத்திலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார் இருப்பினும் லீமா சில நொடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கண்ணும் கருத்துமாக தனது பணியை தொடர்ந்தார் சகோதரர் இழப்பு அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும் கூட பொதுமக்கள் காலை முதல் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு வரிசையில் காத்திருந்ததால் அவர்களை சிரமப்படுத்தாமல் சோகத்தை தனக்குள் வைத்துக் கொண்டு லீமா தொடர்ந்து பொங்கல் தொகுப்பை வழங்கி வந்தார்

இதற்கிடையில் அருகில் இருந்த ஊழியர் ஒருவர் இந்த துக்கமான நேரத்தில் கூட பீமாவுக்கு ஆறுதல் சொல்வதை தவிர்த்து அவரிடம் சரி எந்திரிங்கம்மா எந்திரிங்க சார் வர்றாருன்னு வேலையை தொடரும்படி கூறிய சம்பவம் லீமாவை அதிர்ச்சி அடைய செய்தது. இருப்பினும் எதையும் பொருட்படுத்தாமல் லீமா தனது கடமையை தொடர்ந்து செய்தார் இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us