மனை அங்கீகாரத்துக்கு ரூ.6,000 லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் நகர் ஊரமைப்பு உதவியாளர்!
மனை அங்கீகாரத்துக்கு ரூ.6,000 லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் நகர் ஊரமைப்பு உதவியாளர்!
மனை அங்கீகாரத்துக்கு ரூ.6,000 லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் நகர் ஊரமைப்பு உதவியாளர்!
ADDED : மே 14, 2025 01:51 PM

திருப்பூர்: மனை அங்கீகாரத்துக்கு ரூ.6,000 லஞ்சம் வாங்கிய நகர் ஊரமைப்பு பிரிவின் தொழில்நுட்ப உதவியாளர் நாகலிங்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்து வருகின்றனர். அதிலும் பட்டா மாறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக லஞ்சம் வாங்கி கைது செய்யப்படும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
அந்தவகையில், திருப்பூர், மங்கலம் ரோட்டில் மனை அங்கீகாரம் வழங்க, ஊரமைப்பு பிரிவின் தொழில்நுட்ப உதவியாளர் நாகலிங்கத்தை ஒருவர் அணுகி உள்ளார். இதற்கு ரூபாய் 6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதையடுத்து, புகார் படி, 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகர் ஊரமைப்பு பிரிவின் தொழில்நுட்ப உதவியாளர் நாகலிங்கத்தை திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.