சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 13 பேர் கோவையில் கைது; உ.பி.,யில் 90 பேர் சிக்கினர்!
சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 13 பேர் கோவையில் கைது; உ.பி.,யில் 90 பேர் சிக்கினர்!
சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 13 பேர் கோவையில் கைது; உ.பி.,யில் 90 பேர் சிக்கினர்!

கோவை: கோவையில் சட்ட விரோதமாக தங்கி இருந்த, வங்கதேசத்தினர் 13 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், உ.பி.,யில் வங்க தேசத்தினர் 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டின் பல பகுதிகளில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தினர் பற்றிய கணக்கெடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் நம் நாட்டிற்குள் நுழைந்து, இங்கேயே தங்கியுள்ள வங்கதேசத்தினரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி உத்தர பிரதேசத்தின் மதுராவில் சட்ட விரோதமான முறையில் வங்கதேசத்தினர் பலர் வசிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. காஜ்பூர் பகுதியில் போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தினர். அப்போது, சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
வங்கதேசத்தினருக்கு போலி ஆவணம் தயாரித்துக் கொடுக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கோவையில் 13 பேர் கைது
கோவையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சட்ட விரோதமாக தங்கி இருந்த, வங்கதேசத்தினர் 13 பேரை கோவை பீளமேடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் எப்படி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.