ஓய்வு ராணுவ வீரரின் வீட்டில் 58 பவுன் நகைகள் கொள்ளை
ஓய்வு ராணுவ வீரரின் வீட்டில் 58 பவுன் நகைகள் கொள்ளை
ஓய்வு ராணுவ வீரரின் வீட்டில் 58 பவுன் நகைகள் கொள்ளை
ADDED : ஜன 08, 2024 12:48 AM

சிவகாசி, ஜன. 8 -- -
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் எத்திராஜ் 62, வீட்டில் 58 பவுன் நகைகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகாசி லட்சுமி நகர் 4வது தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் எத்திராஜ். இவரின் மனைவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் இரு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலை சென்றனர். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்புறம் உள்ள கேட்டின் பூட்டு, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே கப்போர்டில் இருந்த தங்கச்செயின்கள், நெக்லஸ், பிரேஸ்லெட்டுகள், தோடு, மோதிரம் உள்ளிட்ட 58 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தன. தடயவியல் நிபுணர்கள் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டிருந்தது. திருத்தங்கல் போலீசார், தனிப்படையினர் இக்கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
நான்கு நாட்களுக்கு முன்பு பிருந்தாவன் நகரில் பூட்டிய வீட்டில் இரு மர்ம நபர்கள் திருட முயன்றனர். பொருட்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது குறித்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் மீண்டும் பூட்டிய வீட்டில் நடந்த கொள்ளை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.