Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'தேஜஸ்' உட்பட 4 ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்

'தேஜஸ்' உட்பட 4 ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்

'தேஜஸ்' உட்பட 4 ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்

'தேஜஸ்' உட்பட 4 ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்

ADDED : ஜூன் 13, 2025 01:06 AM


Google News
மதுரை:'சென்னை எழும்பூரில் சீரமைப்பு பணிகள் நடப்பதால், 'தேஜஸ்' உட்பட நான்கு ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்' என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜூன் 20 முதல் ஆக., 18 வரை மதுரை தேஜஸ் ரயில், காலை 6:22 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில் இரவு 9:25 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

ஜூன் 20 முதல் ஆக., 18 வரை தாம்பரத்தில் இருந்து திருச்செந்துார் ரயில், மாலை 4:27 மணிக்கும், கொல்லம் ரயில், மாலை 5:27 மணிக்கும் புறப்படும். மறுமார்க்கம், ஜூன் 19 முதல் ஆக., 17 வரை ரயில் அதிகாலை, 2:45 மணிக்கும், காலை 10:00 மணிக்கும் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

ஜூன் 20 முதல் ஆக., 19 வரை குருவாயூர் ரயில், தாம்பரத்தில் இருந்து காலை 10:47 மணிக்கு புறப்படும். மறுமார்க்கம் ரயில், ஜூன் 18 முதல் ஆக., 18 வரை இரவு 7:45 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

ஜூன் 26, ஜூலை 3, 10, 17, 24, 31, ஆக., 7, 14ல் மதுரை - பிகானீர் ரயில், எழும்பூரில் நிற்காது. பயணியர் வசதிக்காக சென்னை பீச் ஸ்டேஷனுக்கு இரவு 8:00 மணிக்கு சென்று, 15 நிமிடங்கள் நின்று செல்லும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us