Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தமிழகத்தில் 280 போலீஸ் ஸ்டேஷன்கள்:இன்ஸ்பெக்டர்கள் தரத்திற்கு உயர்வு

தமிழகத்தில் 280 போலீஸ் ஸ்டேஷன்கள்:இன்ஸ்பெக்டர்கள் தரத்திற்கு உயர்வு

தமிழகத்தில் 280 போலீஸ் ஸ்டேஷன்கள்:இன்ஸ்பெக்டர்கள் தரத்திற்கு உயர்வு

தமிழகத்தில் 280 போலீஸ் ஸ்டேஷன்கள்:இன்ஸ்பெக்டர்கள் தரத்திற்கு உயர்வு

ADDED : ஜூன் 07, 2025 02:28 AM


Google News
சிவகங்கை:தமிழகத்தில் எஸ்.ஐ., தரத்தில் உள்ள 280 போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு இன்ஸ்பெக்டருக்கு, இரண்டு போலீஸ் ஸ்டேஷன்கள் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு அந்தஸ்தில் எஸ்.ஐ., தரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் தரத்திலான ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 280 ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தரம் உயர்ந்த ஸ்டேஷன்கள்:

மதுரை : கீழவளவு, மேலவளவு, அப்பன்திருப்பதி, கருப்பாயூரணி, பெருங்குடி, ஆஸ்டின்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் தாலுகா, கூடக்கோவில், சாப்டூர், வில்லுார், உசிலம்பட்டி தாலுகா, விக்கிரமங்கலம், காடுபட்டி, பாலமேடு.

திண்டுக்கல்: தாடிக்கொம்பு, சாணார்பட்டி, சின்னாளபட்டி,குஜியம்பாறை, ரெட்டியார்சத்திரம், கள்ளிமந்தயம், பழநி அடிவாரம், சாமிநாதபுரம்.

தேனி: வீரபாண்டி, ஓடைப்பட்டி, ராயப்பன்பட்டி,குமுளி, கூடலுார் தெற்கு, ஜி.விலக்கு, கண்டமனுார், வருஷநாடு, ஜெயமங்கலம்.

ராமநாதபுரம்: எமனேஸ்வரம், பாம்பன், திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை, பேரையூர், இளஞ்செம்பூர், எஸ்.பி., பட்டினம்.

சிவகங்கை: மதகுபட்டி, சிப்காட், பழையனுார், ஆறாவயல், திருவேகம்புத்துார், நாச்சியார்புரம், புழுதிபட்டி, அழகப்பாபுரம், செட்டிநாடு.

விருதுநகர்: ஆமத்துார், மாரநேரி, எம்.புதுப்பட்டி, பந்தல்குடி, மல்லாங்கிணறு, ஆவியூர், கீழராஜகுலராமன், சாத்துார் தாலுகா, அப்பயநாயக்கன்பட்டி, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளம், மம்சாபுரம், நாதம்பட்டி, கூமாபட்டி, எம்.ரெட்டியப்பட்டி,வீரசோழன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us