Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ 28 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்

28 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்

28 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்


ADDED : மார் 16, 2025 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2025 04:59 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், 2.63 லட்சம் டன் கொள்ளளவு உடைய மேற்கூரை அமைப்புடன் கூடிய, 22 நவீன நெல் சேமிப்பு வளாகங்களும்; காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 49,000 டன் கொள்ளளவு உடைய ஆறு நவீன நெல் சேமிப்பு வளாகங்களும் ஏற்படுத்தப்படும்

 நெல் மூட்டைகளை பாதுகாப்பாக அடுக்கி வைக்க, 25,000 இரும்பு இடைச்செருகு கட்டைகளும், நெல்லின் ஈரப்பதம் அறிய, 2,500 'டிஜிட்டல்' கருவிகளும், தஞ்சை, திருவாரூரில் தலா ஒரு டிராக்டருடன் கூடிய நெல் உலர்த்தும் இயந்திரமும் வழங்கப்படும். இத்திட்டம் பல்வேறு நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்து, 480 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.

 வரும் நிதியாண்டில் உணவு மானியத்திற்கு, 12,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us