Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/2026 சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளுக்கு தயாரான தேர்தல் ஆணையம்: வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

2026 சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளுக்கு தயாரான தேர்தல் ஆணையம்: வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

2026 சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளுக்கு தயாரான தேர்தல் ஆணையம்: வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

2026 சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளுக்கு தயாரான தேர்தல் ஆணையம்: வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

Latest Tamil News
சென்னை: 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

இந்நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கி உள்ளது. அதன் முக்கிய கட்டமாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல், இடமாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் கலெக்டர், துணை கலெக்டர், உதவி கலெக்டர் நிலையில் உள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்னர்.

234 தொகுதிகளுக்குமான அதிகாரிகள் யார், அவர்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அரசிதழில் வெளியிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us