ரேடியல் சாலையில் 2,000 வீடுகள் பிரெஸ்டிஜ் இலக்கு ரூ.3,350 கோடி
ரேடியல் சாலையில் 2,000 வீடுகள் பிரெஸ்டிஜ் இலக்கு ரூ.3,350 கோடி
ரேடியல் சாலையில் 2,000 வீடுகள் பிரெஸ்டிஜ் இலக்கு ரூ.3,350 கோடி
ADDED : ஜூலை 02, 2025 01:34 AM
சென்னை:'பிரெஸ்டிஜ் எஸ்டேட் பிராஜக்ட்ஸ்' கட்டுமான நிறுவனம், சென்னையில் கட்டவுள்ள அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் வாயிலாக 3,350 கோடி ரூபாய் வருவாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த இந்நிறுவனம், 'பிரெஸ்டிஜ் பல்லாவரம் கார்டன்ஸ்' என்ற பெயரில், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் 2,069 சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை கட்டவுள்ளது. 21.84 ஏக்கரில் அமையும் இந்த திட்டத்தில், மொத்தம் 31 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பு விற்பனை செய்யப்பட உள்ளது.
குடியிருப்பு, வர்த்தக, விருந்தோம்பல் மற்றும் ஒருங்கிணைந்த டவுன்ஷிப் கட்டடங்களை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் கட்டுவதில், பிரெஸ்டிஜ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.