கடற்கரையில் பதுக்கப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்
கடற்கரையில் பதுக்கப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்
கடற்கரையில் பதுக்கப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : அக் 15, 2025 01:00 AM
ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
திருப்பாலைக்குடி வளமானுார் முனீஸ்வரர் கோயில் கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்தனர். அதில் இருந்த 17 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதனை கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.