யு டியூப் எடிட்டர் ஜாமின்: ஜூன் 10ல் விசாரணை
யு டியூப் எடிட்டர் ஜாமின்: ஜூன் 10ல் விசாரணை
யு டியூப் எடிட்டர் ஜாமின்: ஜூன் 10ல் விசாரணை
ADDED : ஜூன் 08, 2024 02:05 AM
கோவை:பெண் போலீஸ் குறித்து அவதுாறு கருத்து வெளியிட்ட வழக்கில், யு டியூப் எடிட்டர் ஜாமின் மனு மீது ஜூன் 10ல் விசாரணை நடக்கிறது.
'சவுக்கு மீடியா' என்ற யு டியூப் சேனல் நடத்தி வரும், சென்னையை சேர்ந்த சங்கர், 'ரெட்பிக்ஸ்' என்ற யு யூடிப் சேனலுக்கு பேட்டி அளித்த போது, பெண் போலீஸ் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பேட்டியை வெளியிட்ட ரெட்பீக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைதானார். இவரது ஜாமின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கோவை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது அரசு மற்றும் எதிர் தரப்பு வக்கீல் வாதிட, ஜூன்10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.