முதல்வர் ஸ்டாலின் பெயரை தமிழில் மாற்றுவாரா: தமிழிசை
முதல்வர் ஸ்டாலின் பெயரை தமிழில் மாற்றுவாரா: தமிழிசை
முதல்வர் ஸ்டாலின் பெயரை தமிழில் மாற்றுவாரா: தமிழிசை
ADDED : மார் 13, 2025 11:07 PM
சென்னை:' 'இரு மொழி கல்விக் கொள்கையை எதிர்க்கும் முதல்வர் ஸ்டாலின், வட மொழியில் இருக்கும் தன்னுடைய பெயரை, தமிழ் மொழியில் மாற்றுவாரா,'' என, முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பினார்.
ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, சென்னை மீனம்பாக்கத்தில், 1,200 பெண்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழிசை பேசியதாவது:
தேசிய கல்வி கொள்கை அனைத்து மாநிலங்களும் ஏற்கின்றன; தமிழகம் மட்டும் மறுக்கிறது.
முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை, 'அனைத்து மாநிலங்களும் மும்மொழியை ஏற்றால், தமிழகத்திலும் ஏற்கப்படும்' என்றார். அண்ணாதுரை வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்துவோர், அதை மறுப்பது ஏன்?
தமிழகத்தில், 47,000 மாணவர்கள் பத்தாம் வகுப்பில், தமிழில் தோல்வி அடைந்துள்ளனர். பிளஸ் 2 தேர்வில், மொழிப் பாடத்தில், 50 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
கல்வி காவி மயமாக்கப்படுகிறது என முதல்வர் கூறுகிறார். ஆனால், தமிழகத்தை கருணாநிதி மயமாக்க்கலாமா?
சென்னையில், 10 லட்சம் கேரள மக்கள், 40 லட்சம் தெலுங்கு மக்கள் உள்ளனர். அவர்களின் பிள்ளை படிக்க மும்மொழிக் கொள்கை மிக அவசியம்.
இரு மொழி கல்விக் கொள்கையை எதிர்க்கும் முதல்வர் ஸ்டாலின், வட மொழியில் இருக்கும் தன்னுடைய பெயரை, தமிழ் மொழியில் மாற்றுவாரா?
இவ்வாறு அவர் பேசினார்.