இண்டியா கூட்டணியினர் மவுனம் ஏன்?: எல்.முருகன் பேட்டி
இண்டியா கூட்டணியினர் மவுனம் ஏன்?: எல்.முருகன் பேட்டி
இண்டியா கூட்டணியினர் மவுனம் ஏன்?: எல்.முருகன் பேட்டி
ADDED : ஜூன் 24, 2024 03:05 PM

புதுடில்லி: 'கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து இண்டியா கூட்டணியினர் பேசாதது ஏன்?. தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி என்பதால் மவுனமா?' என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டம் மீது எப்போதும் மரியாதை மற்றும் நம்பிக்கை வைத்துள்ளார். இண்டியா கூட்டணி கட்சிகளின் செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் இறந்துள்ளனர். அது பற்றி காங்கிரஸ் தலைவர்கள் வாயை திறக்க மறுக்கிறார்கள்.
சமூக நீதி
இண்டியா கூட்டணி கட்சிகளின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி என்பதால் மவுனமா?. இவர்கள் அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் சமூக நீதி பற்றி பேசுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் இதுவரை பாதிக்கப்பட்ட இடத்துக்கு செல்லவில்லை. அதனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சி.பி.ஐ., விசாரணை கோரினார். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.