அனைத்திலும் தோல்வி ஏன்? 14 முதல் ராமதாஸ் ஆய்வு
அனைத்திலும் தோல்வி ஏன்? 14 முதல் ராமதாஸ் ஆய்வு
அனைத்திலும் தோல்வி ஏன்? 14 முதல் ராமதாஸ் ஆய்வு
ADDED : ஜூலை 12, 2024 06:07 AM

சென்னை : பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், 10 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., அனைத்திலும் தோல்வி அடைந்தது.
தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா, 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கள்ளக்குறிச்சியில் 71,290 ஓட்டுகள் மட்டுமே பெற்று, நாம் தமிழர் கட்சிக்கு அடுத்து நான்காவது இடத்தை பெற்றது.
இதுகுறித்து, நாளை மறுநாள் முதல் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வி ஏன் என்பது குறித்து தொகுதி வாரியாக ராமதாஸ் ஆய்வு நடத்துகிறார். நாளை மறுநாள் துவங்கும் ஆய்வுக் கூட்டம் வரும் 19 வரை நடக்கும் என பா.ம.க., அறிவித்துள்ளது.