தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே மின் தடை தான்
தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே மின் தடை தான்
தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே மின் தடை தான்
ADDED : ஜூன் 03, 2024 06:35 AM

தமிழகத்தின் குமரி முனையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு, ஆன்மிக பூமி என நிரூபித்துவிட்டார். அவரை பற்றிய 'மீம்ஸ்' அதிகம் வருகிறது. கேலி, கிண்டல்களை தவிர்க்க வேண்டும்.
கருத்துக் கணிப்புகளை காட்டிலும், தேர்தல் முடிவுகளில் பா.ஜ.,வுக்கு அதிக இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பா.ஜ., அதிக இடங்களை பிடித்து, மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார். தமிழகம் மின் மிகை மாநிலம் என, முதல்வர் அறிக்கை வெளியிடுகிறார்.
நேற்றிரவு, என் வீட்டிலேயே மின் தடை ஏற்பட்டது. வியாழக் கிழமை, சாய்பாபா கோவில் செல்லும் போது, கோடம்பாக்கம் முழுதும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கிக் கிடக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, மின் தடை தான். திருமாவளவன் பிரதமர் கனவு காண்கிறார்; தாமரை நிச்சயம் மலர்ந்தே தீரும்.
- தமிழிசை
முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,