Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'இண்டியா கூட்டணி வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்': முதல்வர் ஸ்டாலின்

'இண்டியா கூட்டணி வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்': முதல்வர் ஸ்டாலின்

'இண்டியா கூட்டணி வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்': முதல்வர் ஸ்டாலின்

'இண்டியா கூட்டணி வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்': முதல்வர் ஸ்டாலின்

ADDED : ஜூன் 04, 2024 02:34 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'இண்டியா கூட்டணி வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியாக கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

சோனியா, ராகுல், பரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட, இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டில்லியில் ஒன்று கூடி, கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவில் மரியாதை செலுத்தினர்.

இந்நாளில், கருணாநிதியை ஒரு மாநிலத் தலைவராக மட்டுமின்றி, தேசிய தலைவராக போற்றி வணங்குகிறோம். கூட்டாட்சியியல் மற்றும் மக்களாட்சிக்காக தொடர்ந்து உறுதியாகக் குரல் கொடுத்த கருணாநிதி, தேசக் கட்டுமானத்தில் மிக முக்கிய பங்காற்றி உள்ளார். நெருக்கடியான காலங்களில், தேசிய அளவில் நிலையான ஆட்சி தொடர்வதை உறுதி செய்துள்ளார்.

பல பிரதமர்கள், ஜனாதிபதிகளை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகித்து, இந்தியாவின் அரசியல் நிலப்பரப்பை பக்குவமாக வடிவமைத்தவர் அவர்.

கருணாநிதி நுாற்றாண்டு நிறைவில் பெற்ற புது உத்வேகத்துடன், இண்டியா கூட்டணியின் வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியாக கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்.

கருணாநிதி பிறந்தார், நிறைந்தார் என்ற வாழ்வின் இரு புள்ளிகளுக்கிடையில், தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். தமிழினத்தின் எழுச்சிக்காக உழைத்தார். வரலாற்றை தன்னை சுற்றிச் சுழலவிட்டார். கருணாநிதி எனும் பேருழைப்பில் தமிழகம் வளம் பெற்றது; தமிழினம் நலம் பெற்றது. இந்த நுாற்றாண்டுகளில் நிகழ்ந்துள்ள தமிழ் புரட்சி, தமிழினத்தின் எழுச்சி, தமிழகத்தின் வளர்ச்சி என, எங்கும், எதிலும் கருணாநிதியின் முத்திரை பதிந்துள்ளது.

அவரது புகழை நாளும் சொல்வது, நாளை நாம் பெற வேண்டிய வெற்றிகளுக்கு பாதை அமைப்பதாகும். வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல கருணாநிதி; அந்த வானத்தை ஆளும் சூரியன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us