தயாநிதி அவதுாறு வழக்கில் வினோஜ் செல்வம் ஆஜர்
தயாநிதி அவதுாறு வழக்கில் வினோஜ் செல்வம் ஆஜர்
தயாநிதி அவதுாறு வழக்கில் வினோஜ் செல்வம் ஆஜர்
ADDED : ஜூன் 07, 2024 01:59 AM
சென்னை, லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை பா.ஜ., வேட்பாளராக மனோஜ் செல்வம் போட்டியிட்டார். அவர், ஏப்.,13ம் தேதி, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், 'மத்திய சென்னை தி.மு.க., - எம்.பி., தயாநிதி தன் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தவில்லை' என, பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வினோஜ் செல்வம் மீது தயாநிதி அவதுாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், 'மத்திய சென்னை எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 95 சதவீதத்திற்கு மேல், பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது' என, தெரிவித்திருந்தார். இவ்வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் தர்மபிரபு முன், மே 14ல், விசாரணைக்கு வந்தது. அப்போது, வினோஜ் செல்வம் ஆஜராகவில்லை. இதனால், விசாரணை ஜூன், 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது வினோஜ் செல்வம் ஆஜரானார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு விபரங்கள் தெரிவிக்கப்பட்டன. பின், இனி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருவது தொடரபாக ஆவணங்கள் தாக்கல் செய்யலாம் என, கூறிய மாஜிஸ்திரேட், விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
எழும்பூர், 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகவந்த மனோஜ் செல்வம், மின்துாக்கியில் செல்ல முயன்றார். மின்வெட்டு காரணமாக, முதல் மற்றும் இரண்டாம் தளத்திற்கு இடையே, மின் துாக்கி நின்றுவிட்டது. 10 நிமிடத்தில் தரையிறக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.