உ.பி., தொழிலாளி மயங்கி விழுந்து இறப்பு
உ.பி., தொழிலாளி மயங்கி விழுந்து இறப்பு
உ.பி., தொழிலாளி மயங்கி விழுந்து இறப்பு
ADDED : ஜூன் 02, 2024 11:29 PM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உ.பி., யைச் சேர்ந்த குல்பி ஐஸ் தொழிலாளி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
உ.பி., கான்பூரை சேர்ந்தவர் ஹபீப்முகமது 36; இவர் குடும்பத்துடன் ராமேஸ்வரத்தில் தங்கி குல்பி ஐஸ் வாங்கி சைக்கிளில் வைத்து விற்று வந்தார். நேற்று முன்தினம் இங்குள்ள பஸ் ஸ்டாண்டில் ஐஸ் விற்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் குறைந்த ரத்த அழுத்தத்தால் ஹபீப்முகமது இறந்ததாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.