ADDED : ஜூன் 15, 2024 01:12 AM
சென்னை:தமிழக ரேஷன் கடைகளுக்கு, 2023 ஜூலை 23 மற்றும் ஆக., 4ம் தேதி விடுமுறை நாட்களாக இருந்தது. இருப்பினும், அந்த இரு நாட்களும் மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணியில், ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதை ஈடுசெய்யும் வகையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு இன்றும், அடுத்த மாதம், 20ம் தேதியும் விடுமுறை அறிவித்து, உணவு வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.