மதிப்பெண் பட்டியலில் பிழை நீக்க அவகாசம்
மதிப்பெண் பட்டியலில் பிழை நீக்க அவகாசம்
மதிப்பெண் பட்டியலில் பிழை நீக்க அவகாசம்
ADDED : ஜூன் 08, 2024 01:28 AM
சென்னை:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலில் இருக்கும் பிழைகளை திருத்த, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தற்போதுள்ள தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், மாணவர்களின் பெயர், தலைப்பெழுத்து, பெற்றோர் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி ஆகியவற்றில், திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதற்கு, தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவரின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அல்லது மதிப்பெண் பட்டியலின் நகலில், தேவைப்படும் திருத்தங்கள் மேற்கொண்டு சான்றொப்பமிட்டு, அரசு தேர்வு உதவி இயக்குனர் அலுவலகத்தில், வரும் 12ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
இதில் பள்ளிகளும், தலைமை ஆசிரியர்களும், முதன்மை கல்வி அலுவலர்களும் கவனம் எடுத்து, மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல், மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்பட்ட பின், சான்றிதழ் திருத்தம் செய்யக்கோரி, இவ்வலுவலகத்திற்கு மனுக்கள் அனுப்புதல் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***