Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ காயத்துடன் சுற்றிய புலியை பிடித்து வனத்துறை சிகிச்சை

காயத்துடன் சுற்றிய புலியை பிடித்து வனத்துறை சிகிச்சை

காயத்துடன் சுற்றிய புலியை பிடித்து வனத்துறை சிகிச்சை

காயத்துடன் சுற்றிய புலியை பிடித்து வனத்துறை சிகிச்சை

ADDED : ஜூன் 18, 2024 12:04 AM


Google News
Latest Tamil News
உடுமலை : ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச்சரகம் பகுதியில், தேசிய புலிகள் கணக்கெடுப்பு பணி சமீபத்தில் நடந்தது. அப்போது, 10 வயது ஆண் புலி, காயமடைந்த நிலையில் கண்டறியப்பட்டது. உடனடியாக காயமடைந்த புலிக்கு சிகிச்சை அளிக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். அந்த புலியை பிடிக்க, மூன்று இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டதில், கடந்த, 15ம் தேதி, காயமடைந்த புலி, கூண்டில் சிக்கியது.

டாக்டர்கள் கண்காணிப்பில், ஒரு நாள் புலி இருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

வனத்துறையினர் கூறியதாவது: வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், தேவையற்ற பொருட்கள் வீசுவதால், வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. கடந்த மாதம், யானையில் காலில், சிக்கிய நைலான் கயிறு அகற்றப்பட்டது. தற்போது, புலியின் வயிற்றுப்பகுதியில் சிக்கிய துணிக்கயிறு அகற்றப்பட்டது.

வனத்திற்குள வீசிய கயிறு, புலி நடந்து செல்லும் போது, கயிறு சிக்கி, இறுக்கி, காயத்தை ஏற்படுத்தியது. இதனால், நடக்க முடியாமல், அதிலிருந்து விடுபட முடியாமலும், அவதிப்பட்டு வந்தது.

தொடர்ந்து, ஒரு மாதம் வரை, இந்த புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். வனப்பகுதிக்கு செல்வோர், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிளாஸ்டிக், தேவையற்ற பொருட்களை வீசக்கூடாது.

இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us