வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை திருட்டு
வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை திருட்டு
வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை திருட்டு
ADDED : ஜூன் 04, 2024 06:36 AM

விருத்தாசலம் : வீட்டின் பூட்டை உடைத்து, 10 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த எருமனுார் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ்,51; இவரது மனைவி வளர்மதி,47; இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே துாங்கினர்.
நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைந்திருந்தது. அதிர்ச்சியடைந்த செல்வராஜ் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ரூ. 20 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.
விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கடந்தவாரம், அருகில் உள்ள எ.வடக்குப்பம் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் வீட்டின் பீரோவை திறந்து ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததடுத்து இரண்டு திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.