ஓட்டு எண்ணிக்கை மையத்திலிருந்து பாதியில் ஓடிய நிர்வாகிகள் மாவட்ட செயலர்களை அழைத்து 'டோஸ்' விட்ட இ.பி.எஸ்.,

விலை போன நிர்வாகிகள்
லோக்சபா தேர்தலில் சுணக்கம் காட்டிய நிர்வாகிகள், தேர்தல் பணிகள் மேற்கொள்ளாத இடங்கள், 'விலை'போன நபர்கள், நகரம், ஒன்றியம் வாரியாக அ.தி.மு.க., பெற்ற ஓட்டுக்கள், தி.மு.க., வித்தியாசம் குறித்து, கட்சியில் உள்ள நம்பிக்கையான நிர்வாகிகள் மற்றும் தனியார் அமைப்பு மூலம், 39 தொகுதிக்கும் பட்டியல் தயார் செய்யும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பெறப்பட்டு, அதில் உள்ள கட்சியினரிடம் விசாரணை செய்து, புகார் உண்மையாக இருந்தால், அவர்களது கட்சி பதவி பறிப்பு இருக்கும். சில இடங்களில், ஒன்றியம், நகரம் இரண்டாக பிரிக்கவும் கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தலை விட ஓட்டுக்கள் சரிவு
சேலம் லோக்சபா தொகுதியில் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, இடைப்பாடி, ஓமலுார், வீரபாண்டி ஆகிய, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 4 சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க. வசமும், ஒரு தொகுதி தி.மு.க., விடமும், ஒரு தொகுதி, அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட, பா.ம.க.,விடமும் உள்ளது.