ADDED : ஜூன் 04, 2024 12:58 AM
சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,820 கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. அந்த கடைகளுக்கு, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் உட்பட ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டுமே விடுமுறை. தமிழகம் உட்பட நாடு முழுதும் லோக்சபா தேர்தலில், பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன.
இதை முன்னிட்டு, தமிழகத்தில் இன்று, மது கடைகளுக்கு விடுமுறை அறிவித்து, டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது. மேலும், மது கடைகளை ஒட்டிய மதுக்கூடம் உள்ளிட்ட இடங்களில், சட்ட விரோத மது விற்பனையை தடுக்க, தீவிர ஆய்வு மேற்கொள்ளுமாறு, மாவட்ட மேலாளர்களை அறிவுறுத்தியுள்ளது.