தமிழக சட்டசபையில் குவைத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்
தமிழக சட்டசபையில் குவைத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்
தமிழக சட்டசபையில் குவைத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்
UPDATED : ஜூன் 20, 2024 03:09 PM
ADDED : ஜூன் 20, 2024 10:20 AM

சென்னை: தமிழக சட்டசபை இன்று (ஜூன் 20) சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடியது. மறைந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்டபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையில், 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட், பிப்., 19ல் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடத்தி முடிக்கப்பட்டு, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் காரணமாக, துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படாமல், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டம், இன்று(ஜூன் 20) காலை 10:00 மணிக்கு கூடியது. மறைந்த எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கராஜ், ரவிக்குமார், தனராஜ், சின்னச்சாமி, ராமகிருஷ்ணன், கணேச மூர்த்தி, சிவராமன், வேணுகோபால், இராம வீரப்பன், இந்திரி குமாரி, எச்.எம்.ராஜூ, வேலாயுதம், மலரவன், ராசம்மாள், பரமசிவம், ராமநாதன், புகழேந்தி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமீபத்தில் குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இன்றைய அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. வரும் 29ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத் தொடரில், மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, தங்கள் பலத்தை காட்ட அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் முனைப்புடன் உள்ளன.