Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தமிழகத்தில் முதன் முறையாக இயற்கை எரிவாயுவில் இயக்கப்படும் அரசு பஸ்: ராமநாதபுரத்தில் சோதனை ஓட்டம்

தமிழகத்தில் முதன் முறையாக இயற்கை எரிவாயுவில் இயக்கப்படும் அரசு பஸ்: ராமநாதபுரத்தில் சோதனை ஓட்டம்

தமிழகத்தில் முதன் முறையாக இயற்கை எரிவாயுவில் இயக்கப்படும் அரசு பஸ்: ராமநாதபுரத்தில் சோதனை ஓட்டம்

தமிழகத்தில் முதன் முறையாக இயற்கை எரிவாயுவில் இயக்கப்படும் அரசு பஸ்: ராமநாதபுரத்தில் சோதனை ஓட்டம்

ADDED : ஜூன் 17, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம் : தமிழகத்தில் முதன் முறையாக ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயுவில் இயக்கப்படும் அரசு பஸ் சோதனை முறையில் இயக்கப்படுகிறது. விரைவில் இச்சேவை மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயுவான (சி.என்.ஜி) கம்ப்ரஸ்டு நேச்சரல் காஸ் மூலம் சோதனை ரீதியாக இயக்கப்படுகிறது. ராமநாதபுரம் - பெரியபட்டினம் 4 ஏ வழித்தடத்தில் இப்பஸ் இயக்கப்படுகிறது.

போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: இயற்கை எரிவாயு பஸ்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை. ஒரு கிலோ காஸ் ரூ.75 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோவில் சோதனை ஓட்டத்தில் 5.60 கி.மீ., வரை கிடைக்கிறது. டீசலில் ஒரு லிட்டர் ரூ.100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒரு லிட்டருக்கு 5.50 கி.மீ., தான் கிடைக்கும்.

எரிபொருள் சிக்கனம், செலவு குறைகிறது. பராமரிப்பும் பெரிய அளவில் இல்லை. காஸ் லீக் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எல்.பி.ஜி., காஸ் போல் சி.என்.ஜி., காஸ் பாதிப்பை ஏற்படுத்தாது. அப்படியே லீக் ஆனாலும் காற்றில் கரைந்து விடும் தன்மையுடையது.

அடுத்த கட்டமாக ராமநாதபுரம் - உத்தரகோசமங்கை - சாயல்குடி வழித்தடத்தில் இயற்கை எரிவாயு பஸ் இயக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

ராமநாதபுரத்தில் சோதனை ரீதியாக இரண்டு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் நிறை, குறைகளை சரி செய்து மாநிலம் முழுவதும் இயற்கை எரிவாயு பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றனர்.-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us