பிரஜ்வல் காதலிக்கு சம்மன்: மகனை பார்த்து தந்தை கண்ணீர்
பிரஜ்வல் காதலிக்கு சம்மன்: மகனை பார்த்து தந்தை கண்ணீர்
பிரஜ்வல் காதலிக்கு சம்மன்: மகனை பார்த்து தந்தை கண்ணீர்
ADDED : ஜூன் 09, 2024 02:50 AM

ஹாசன்: விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் எம்.பி., பிரஜ்வலின் காதலிக்கு, சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கர்நாடக மாநிலம், ஹாசன் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. பாலியல் வழக்கில் கடந்த மாதம் 31ம் தேதி அதிகாலை, பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மறுநாள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய, சிறப்பு புலனாய்வு குழுவினர் ஏழு நாட்கள் காவலில் எடுத்தனர்.
கடந்த 6ம் தேதி அவரது காவல் முடிந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிறப்பு புலனாய்வு குழுவினர், மேலும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்தனர். நாளையுடன் அவரது போலீஸ் காவல் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், ஹாசன் ஆர்.சி., ரோட்டில் உள்ள வீடு, ஹொளேநரசிபுராவில் உள்ள ரேவண்ணாவின் வீடுகளுக்கு, பிரஜ்வலை நேற்று சிறப்பு புலனாய்வு குழுவினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பிரஜ்வலின் அறையில் அங்குலம், அங்குலமாக சோதனையும் நடத்தப்பட்டது. ஹொளேநரசிபுரா வீட்டில் சோதனை நடந்த போது அங்கிருந்த ரேவண்ணா, மகன் பிரஜ்வலை பார்த்து கண்ணீர் விட்டார்; பிரஜ்வலும் அழுதார். விசாரணை முடிந்ததும் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையில் பிரஜ்வல், ஜெர்மனியில் இருந்த போது, அவருக்கு பெங்களூரில் இருந்து பணம் அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்தும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர். பிரஜ்வலுக்கு, அவரது காதலி பணம் அனுப்பியதும், ஜெர்மனியில் தலைமறைவாக இருக்க உதவியதும் தெரிய வந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பி உள்ளது.