தரமற்ற கான்கிரீட் சாலை; ப.வேலுார் மக்கள் புகார்
தரமற்ற கான்கிரீட் சாலை; ப.வேலுார் மக்கள் புகார்
தரமற்ற கான்கிரீட் சாலை; ப.வேலுார் மக்கள் புகார்
ADDED : ஜூன் 03, 2024 04:05 AM

ப.வேலுார் : நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்., 13வது வார்டு பகுதியில், நேற்று கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்தது. இப்பணி குறுகிய நேரத்தில் முடிந்தது. பழைய கான்கிரீட் சாலையை அகற்றாமல், அதன் மீதே சிமென்ட் கலவையை கொட்டி பணியை முடித்ததால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: ஏழு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, வெறும் ஏழே நிமிடத்தில் முடிந்தது. கான்கிரீட் கலக்கும் லாரியால், பெரிய குழாயால், வாசலில் தண்ணீர் தெளிப்பது போல சிமென்ட் கலவையை கொட்டி சாலை அமைத்தனர்.
பழைய சாலையை அகற்றாமல் அமைத்துள்ளதால், மேடு பள்ளமாகக் காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது, வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.