வங்கதேசத்தில் சிக்கிய தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை: தமிழக அரசு உறுதி
வங்கதேசத்தில் சிக்கிய தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை: தமிழக அரசு உறுதி
வங்கதேசத்தில் சிக்கிய தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை: தமிழக அரசு உறுதி
ADDED : ஜூலை 21, 2024 01:16 PM

சென்னை: வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு, 120 பேர் பலியானதை அடுத்து, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ராணுவம் ரோந்து வருகிறது. வங்கதேச எல்லையில் தமிழக மாணவர்கள் தவித்து வருகின்றனர். தமிழக மாணவர்களை கல்லூரி பஸ் மூலம் எல்லையில் இறக்கிவிட்டுச் சென்றதாக தகவல் வெளியானது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக 2 விமானங்கள் மூலம் 35 தமிழர்கள் இன்று தாயகம் திரும்ப உள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். 2ம் கட்டமாக 60 பேரை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி, இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்போடு தமிழர்களை மீட்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.